DMNS Higher Secondary School

DMNS Sivanthi Aadhiththanar Higher Secondary School Navaladi

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா நவ்வலடியில் ஊர்மக்கள் நன்கொடையாக கொடுத்த 10 ஏக்கர் நிலத்தில் 6.6.1994ல் தெக்ஷண மாற நாடார் சங்கம் சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 2004 – 05ல் 11 மற்றும் 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.. தற்போது 565 மாணவ மாணவியரும் 21 ஆசிரியர்களும் 3 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடனும் பள்ளி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

நமது பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு கல்வி பரிசை தெய்வத்திரு. ஆறுமுகநயினார் நாடார் – சொரிமுத்தம்மாள் நினைவாகவும், 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ – மாணவியருக்கு செல்வத்திருமணி அவர்கள் நினைவாகவும் குண்டல் திரு. A. கிருஷ்ணமூர்த்தி அமிர்தராஜ் Retd. V.A.O. அவர்கள் வெள்ளிப்பதக்கமாகவும் வழங்குகின்றனர்.

12ம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தெய்வத்திரு. R. செண்பகவல்லி அவர்கள் நினைவாக ரூ. 1000/- நினைவுப்பரிசை திரு . R. செந்தில்ராஜ் M.C.A., அவர்களும், தெய்வத்திரு. R. இந்திரா அவர்களின் நினைவாக 10ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 1000/- நினைவுப் பரிசை திரு. R. அரவிந்தராஜ் B.A., B.L., அவர்களும் வழங்கி பெருமைபடுத்துகின்றனர்.10ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு திரு. DR. E. ஜான்ஜோதிபிரகாஷ் அவர்கள் ரூ. 500/- சிறப்பித்து வருகின்றார்கள்.

10ம் வகுப்பு தேர்வில் 1995 முதல் தொடர்ந்து 100 சதவீதம் வெற்றி பெற்று வருகிறார்கள். மாணவர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பார்க்காமல் பாடுபட்ட ஆசிரிய, ஆசிரியை பெருமக்களுக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.