Celebration of Thiruchendur Murugan’s Avani and Maasi Festivals

மண்டகப்படி நடத்துதல் – அனுமதி  

  1. திருசெந்தூர்  அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களில் திருசெந்தூர் சன்னதி தெருவில் உள்ள தெட்சின மாற நாடார் சங்கத்திற்குச் சொந்தமான மண்டபத்தில் மண்டபப்படி நடத்துவதற்கு பார்வை 1ல் காணும் கடிதத்தில் மேற்படி சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் அனுமதி கேட்டுள்ளனர். இவ்வாறு மண்டபப்படி நடத்துவதற்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களின்படி நடந்துகொள்வதாகவும் மேற்படியார்கள் தெரிவித்துள்ளனர்.
  2. மேற்படி  பொருள் பற்றி திருக்கோயில் தக்கார் அவர்களின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டதில். பார்வையில் காணும் தமது தீர்மானத்தில் ஆவணி மற்றும் மாசி மாதங்களில் 10ம் திருநாள் அன்று சன்னதித் தெருவிலுள்ள மேற்படி  சமுதாயத்தினரின் மண்டபத்தில் அவர்கள் சொந்தச் செலவில் மண்டபப்படி நடத்துவதற்கு அனுமதி  அளித்தும், அடுத்தடுத்து வரும் வருடங்களில் மேற்படி மண்டபப்படியை நிரந்தரமாக நடத்துவதற்கு தேவையான வைப்புத் தொகையை அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் ஏற்படுத்தியோ உறுதிபடுத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்று தீர்மானம் இயற்றியுள்ளார்.
  3. தக்கார் அவர்களின் தீர்மானத்திற்கு இணங்க, ஒவ்வாரு ஆண்டும் ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் 10ம் நாள்  அன்று குமரவிடங்கப் பெருமானை திருசெந்தூர் சன்னதி தெருவில் உள்ள தெட்சின மாற நாடார் சமூகத்தினரின் மண்டபத்தில் எழுந்தருள் செய்து, அவர்கள் செலவில் மண்டபப்படி நடத்துவதற்கு இதன் மூலம் அனுமதி அளிக்கப் படுகிறது. இதற்காக செலுத்தவேண்டிய வைப்புத் தொகை  விபரம்  பின்னர் தெரிவிக்கப்படும்.
  4. மண்டபப்படிக்கு  ஆகும் செலவு பற்றிய விபரத்தை திருக்கோயில் தெரிந்து அதன்படி செயலாற்ற வேண்டுமென்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

permission_paper