All posts by admin

About admin

nellaidmns648

Perunthalaivar K.Kamarajar 116 Birthday Celebration

திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தியபோது

Perunthalaivar K.Kamaraj’s 112 Birthday Celebration at T.D.M.N.S College

தி.தெ.மா.நா.ச.கல்லூரி, தெ.கள்ளிகுளம்.பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி தெக்ஷணமாற நாடார் சங்கம் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முதலாவதாக காலை 10.15மணிக்கு காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வள்ளியூர் பேரூராட்சி மன்ற தலைவர் நுச.வு.வு.N.லாரன்ஸ் அவர்கள் தனது பொறுப்பிலிருந்து ரூ.40 லட்சம் செலவில் கல்லூரியின் சாலைப் பணியினை துவக்கி வைத்தார்கள். பின்னர் கல்வி எழுச்சி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

கல்வி எழுச்சி நாள் விழா டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் முனைவர்.ஏ.லாரன்ஸ் மேரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கு கல்லூரி மற்றும் சங்கத்தின் தலைவர் திரு.நு.சு.சபாபதி நாடார் அவர்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்கள். தலைமையுரையில் காமராஜரின் கல்விப் பணியினை எடுத்துரைத்து மாணவர்களாகிய நீங்களும் அவர் வழியில் நேர்மையுடன், தாழ்மையுடன், பெருமையுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்கள்.

கல்லூரியின் செயலர் திரு.சு.சண்முகவேல் நாடார் அவர்கள், முதல்வர் முனைவர். சு.பொன்முருகன் அவர்கள் முன்னிலை வகுத்தார்கள். பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் திரு.ஆ.ஜெயக்குமார், பயின்றோர் கழக செயலர் திரு.P.தமிழ்செல்வன் மற்றும் சிறுமளஞ்சி திரு.ஊய்க்காட்டான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னிலை மற்றும் வாழ்த்துரையில் காமராஜரின் ஆட்சி பணி மற்றும் கல்விக்கு ஆற்றிய தொண்டினை கோடிட்டுக் காட்டி பெருந்தலைவரின் வழியில் மாணவர்களாகிய நீங்களும் அவ்வழியில் நடந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார்கள். முற்பகல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வள்ளியூர் பேரூராட்சி மன்ற தலைவர் நுச.வு.வு.N.லாரன்ஸ் அவர்கள் காமராஜர் ஆற்றிய பணியினை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள்.

பிற்பகல் அமர்வில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாவூர்சத்திரம் கவிஞர் ஒய்த்தி அவர்கள் கலந்து கொண்டார்கள். தனது சிறப்புரையில் காமராஜரின் தொலைநோக்கு பார்வை கூர்மையான சிந்தனை ஆற்றல் மற்றும் லஞ்ச லாவண்யம் அற்ற ஆட்சி நடத்திய பாங்கினை நகைச்சுவை ததும்ப உரையாற்றினார்கள். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கவிஞர் ஒய்த்தி பரிசுகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொருளாளர் முனைவர்.நு.ராஜன் நன்றி கூறினார்.

விழாவில் கல்லூரிக்குழு உறுப்பினர் ஏ.தங்கவேல், நிர்வாக சபை உறுப்பினர் ஏ.இராதாகிருஷ்ணன், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் கல்லூரி பேராசிரியர் திரு.காசிப்பழம், திரு.ஜெயமணி, அலுவலக கண்காணிப்பாளர் திரு.வேல்சாமி, வேதியியல்துறை பண்டக காப்பாளர் திரு.இந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியினை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இணைச் செயலர் முனைவர்.பு.ஹரிகோவிந்தராஜ் மற்றம் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆ.மரிய தெரஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

Perunthalaivar K.Kamaraj’s 112 Birthday Function

Find below for the Photos of Perunthalaivar K.Kamaraj’s 112 Birthday Celebration.