Welcome to Dakshina Mara Nadar Sangam

img_4தமிழகத்தை ஆண்டசேர சோழ பாண்டியர்களான நாடார்கள் கால சுழற்சியில் அரசுகள் நலிவடைந்த நிலையில் அன்றைய ஆட்சியாளர்களால் ஆட்சியாளர்களின் தாக்குதல்களால் பனைமர காடுகளிலும், தேரிகாடுகளிலும் குடியேறி தன்னிச்சையாக தொழில் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் (400 ஆண்டுகளுக்கு முன்பாக) தனது உற்பத்தி பொருட்களையும், விளை பொருட்களையும் நாட்டின் பல பகுதிகளுக்கு பொதிமாட்டு வண்டிகள் மூலமாகவும், கால்நடையாகவும் சென்று வணிகம் செய்தனர்.

வணிகம் செய்ய சென்ற இடத்தில் பொருள் பாதுகாப்பு, தங்கும் வசதிகளையும் ஏற்படுத்துவதற்காக மகமை என்ற கட்டணத்தை வசூலித்து அதன் மூலம் சுற்றி சுவர்களை எழுப்பி உள்ளே தங்கியிருந்து வணிகம் செய்தனர்.

இது போன்ற பேட்டைகள் சுமார் 64 இடங்களில் கடந்த நூற்றாண்டுகள் வரை இருந்து வந்தது. காலச்சுழற்சியினால் நிர்வாகம் பலகீனப்பட்ட நேரத்தில் பல பேட்டைகள் தனிநபர்களால் ஆங்காங்கே கையகப்படுத்தப்பட்டது.

தெக்ஷணமாற நாடார்கள் முற்காலத்தில் பொருள் ஈட்டுவதற்காக போக்குவரத்து வசதியில்லாததால் பொருள்களை தலை சுமையாலும், பொதி மாடுகளில் ஏற்றியும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்து வந்தனர். சென்ற ஊர்களில் நம் சமூக மக்கள் அனைவரும் ஒருங்கே தங்குவதற்கு லாபத்தில் ஒரு பகுதியை “மகமை” என சேர்த்து ஊருக்கு வெளியே தெற்கத்தி நாடார்களுக்கு என்று பொதுவாக நிலங்கள் வாங்கி கட்டிடங்கள் கட்டி பொருள்களை சேமித்து வைக்க அறைகள் கட்டி [அங்ஙணங்கள்] அனுபவித்து வந்த இடங்கள் அனைத்தும் பிற்காலத்தில் “பேட்டைகள்” என்று அழைக்கப்பட்டன. ஒவ்வொரு பேட்டையின் நிர்வாகமும், மகமை வசூலும் அங்குள்ள நம் முன்னோர்களாலேயே கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஆரம்பத்தில் 12.11.1888ல் திருச்செந்தூர் மண்டபத்தில் காயாமொழி அறுபத்தி மூவர் காயாமொழி ஆதித்த நாடார் குமாரர் சுப்பிரமணிய ஆதித்தன் நாடார் மற்றும் 24 பேர் கூடி திருச்செந்தூர் திருவிழாக்களின் போது கூடி எல்லா பேட்டைகளையும் செவ்வனே பராமரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

  • 1898ல் பேட்டைகளை கவனிக்க 7 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டது.
  • 26.10.1904ல் மதுரை பேட்டையில் ஒரு கூட்டம் கூடி பேட்டைகளை நிர்வாகம் செய்ய 39 அங்கத்தினர்கள் கொண்ட “தெக்ஷணமாற நாடார் பேட்டை நிதி” என்ற சங்கத்தை தோற்றுவித்து காயாமொழி திரு.ரா.ஆறுமுகம் பெருமாள் ஆதித்தன் நாடாரை தலைவராகவும் பிரகாசபுரம் திரு.பி.ஜே.எம்.குலசேகரராஜ் நாடாரை காரியதரிசியாகவும் நியமித்து பேட்டைகளை சுற்றிப் பார்த்து அறிக்கை கொடுத்தார்கள்.
  • 12.5.1923ல் தூத்துக்குடி உறவின்முறையார்கள் தங்கள் பேட்டையை மட்டும் “தெக்ஷணமாற நாடார் மகமை பரிபாலன சங்கம். தூத்துக்குடி” என பதிவு செய்து வக்கீல் A.C.பால் நாடார் அவர்களை தலைவராக நியமித்து நிர்வாகம் நடத்தினார்கள்.மீண்டும் எல்லா பேட்டைகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர 9 பேர் கொண்ட கமிட்டி திரு. A.C.பால் நாடார் தலைமையில் அமைக்கப்பட்டது.
  • எல்லா பேட்டைகளையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர 21.12.1932ல் தெக்ஷணமாற நாடு நாடார்களின் ஐக்கிய மகமை பரிபாலன சங்கம் பதிவு செய்யப்பட்டது. காயாமொழி திரு.R.குமாரசாமி ஆதித்தன் நாடார் தலைவராக செயல்பட்டார்.
  • 18.12.1933ல் திருச்செந்தூர் மண்டபத்தில் தட்சிண நாடார் மஹாஜனம் பாளையங்கோட்டை என ஒரு கூட்டம் கூடி தெக்ஷணமாற நாடு நாடார்களின் ஐக்கிய மகமை பரிபாலன சங்கத்தையும், தூத்துக்குடி தெக்ஷணமாற நாடு நாடார் மகமை பரிபாலன சங்கத்தையும் ஒப்புக்கொள்ளாததால் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர சட்டங்களை திருத்தி ஸ்கீம் சூட் ஒப்புதல் பெற வேண்டும் என தீர்மானித்து அதன்படி OS 13/42 ஸ்கீம் சூட் திருநெல்வேலி சப்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
  • 16.8.1943ல் ஒருங்கிணைக்கப்பட்டு சட்ட திட்டங்கள் இயற்றப்பட்டு தெக்ஷண மாற நாடார் சங்கம் உருவாகியது. சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் 6/48 என பதிவு செய்யப்பட்டது.
Read more